தமன்னா நடிப்பில் உருவான பெட்ரோமாக்ஸ் திரில்லர் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு .

‘அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் தற்போது இயக்கி வரும் “பெட்ரோமாக்ஸ்” ஹாரர் மூவியில் நடித்து வருகிறார் தமன்னா.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை ஃபாஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் தமன்னாவுடன் மன்சூர் அலிகான், யோகி பாபு, பகவதி உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் தலைப்புக்கான போஸ்ட்டரை நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்.