சென்னை:
பெட்ரோல் மீதான ரூ.3 வரியை குறைத்தது தொடர்பான அரசாணையை வெளியிட்டது.


பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கு விற்கப்படும் நிலையில் நாளை முதல் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், பெட்ரோல் மீதான ரூ.3 வரியை குறைத்தது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இந்த் வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.