பிரதமர் குறித்து அவதூறு பரப்பிய முதியவர் கைது

Must read

உத்தரபிரதேசம்:
பிரதமர் மோடி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 65 வயது முதியவர் மன்மோகன் மிஸ்ரா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை மாதவரத்தில் தங்கி இருந்த நிலையில் அவர் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்து பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சென்னை மாதவரத்தில் தங்கியிருந்த அந்த முதியவரை கைது செய்துள்ளனர்.

More articles

Latest article