சென்னை: தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை,  திமுகவுக்கு அம்னீஷியா ஏற்பட்டு இருப்பதாக,  தமிழக பட்ஜெட் குறித்து மாநில பாஜக தலவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல்பட்ஜெட் இன்று தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர்  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

தமிழக பட்ஜெட் குறித்து டிவிட் பதிவிட்டுள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,

‘திமுக அரசு தனது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதில் எதிர்பார்த்ததைப் போலவே தமிழகத்துக்கு எந்த தொலைநோக்குத் திட்டமும் இல்லை. வழக்கம்போல நம்முடைய மத்திய அரசின் திட்டங்களுக்குப் புதிய பெயர் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சரியாக நிர்வகிக்கவில்லை என்று முந்தைய அரசும் விமர்சிக்கப்பட்டு இருக்கிறது.

அதிகாரத்துக்கு வருவதற்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் குறுகிய காலத்திலேயே ‘அம்னீஷியா’ (ஞாபக மறதி) ஏற்பட்டுள்ளது”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.