சென்னை

தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார்.

இவர்களில் சென்னையில் மட்டும் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சென்னை சிறு வழக்குகளுக்கான பதிவாளர் டி.சோபாதேவி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முனிசிப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சைதாப்பேட்டை மெட்ரோ பாலிட்டன் நீதிபதி லாவண்யா, செங்கல்பட்டு நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.