சென்னை:
டந்த 6 நாட்களில் 5-வது முறையாக அதிகரித்த பெட்ரோல் விலை வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.47 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 0.53 காசுகள் உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த 6 நாட்களில் மட்டும் பெட்ரோல் ரூ.3.50 உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் கடந்த 6 நாட்களில் டீசல் ரூ.3.57 விலை அதிகரித்துள்ளது

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.90-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.95.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில்தான் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. தற்போது பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.