நாளை முதல் பெட்ரோல் டீசல் விலையில் தினசரி மாற்றம்!

Must read

டில்லி,

நாளை முதல்  பெட்ரோல், டீசல்7 விலை தினந்தோறும் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்னவே புதுச்சேரி உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் சோதனை முயற்சியாக கடந்த மே மாதம் முதல் பெட்ரோல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது  இதனை விரிவுபடுத்தி நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நாளை முதல் தினசரி விலை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக எண்ணை நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

இந்த புதிய நடைமுறை நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இத்திட்டம் அனைவருக்கும் பயன் தருவதாக அமையும் என்றும், சர்வதேச விலை விதிப்பு முறையை பின்பற்றி அத்திசையில் மிகப்பெரிய அடியெடுத்து வைத்துள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதற்கிடையில், எண்ணை நிறுவனங்களின் இந்த முயற்சிக்கு  பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து 16ம் தேதி வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்தன.

ஆனால், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வேலை நிறுத்த முடிவை கைவிட்டனர்.

அதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தினசரி காலை  6 மணிக்கு புதிய விலை மாற்றம் செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

More articles

Latest article