அயர்லாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளி டாக்டர் தேர்வு!

Must read

லண்டன்,

யர்லாந்தில் நடைபெற்ற ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்வில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அயர்லாந்தின் தற்போதைய பிரதமர்  என்டா கென்னி பதவி விலகியதை தொடர்ந்து,  ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி மருத்துவர் லியோ வரத்கர்  வெற்றிபெற்றதை தொடர்ந்து அவர்  அயர்லாந்தின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.

பைஃன் கேயல் கட்சியைச் சேர்ந்த வரத்கர் வெற்றி பெற்றதாக பாராளுமன்றத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். விரைவில் அயர்லாந்தின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

கத்தோலிக்க மக்கள் அதிகளவில் வாழும் நாடுகளுள் ஒன்றான அயர்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ள வரத்கர், குடியரசு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.

பாராளுமன்ற தலைவருக்கான ஓட்டெடுப்பில் 57 பேரில் 50 பேரின் ஆதரவும், கட்சியின் மூத்த தலைவர்கள் இருவரின் ஆதரவும் கிடைத்ததால் 60 சதவீத வாக்குகளைப் பெற்று உள்துறை அமைச்சருக்கு எதிராக வெற்றி பெற்று  வரத்கர், நாட்டின் 11-வது பிதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வாக்கெடுப்பில் 47 பேர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்க்கது.

மும்பையை சேர்ந்த இந்தியரான அசோக் வரத்கர், அயர்லாந்தின் நலத்துறை அமைச்சரான மிரியம் தம்பதிகளுக்கு பிறந்த வரத்கர் டப்ளினில் பிறந்தார்.

அயர்லாந்தின் பிரதமராக இருந்த என்டா கென்னி தனது பதவியை 2017 தொடக்கத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து, பிரதமர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில், வரத்கர் பிரதராக பொறுப்பேற்க உள்ளார்.

38 வயதாகும் வரத்கர், ஓரினச் சேர்க்கையில் அதீத ஈடுபாடு உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article