சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் கூட்டம்  இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, நிதிநிலை சீரானவுடன் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

தமிழக 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் உரையுடன தொடங்கியது. 24ந்தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடரில் நேற்று முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இன்று 2வது நாளாக  விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களும் பேசி முடித்த பின்பு, 24-ஆம் தேதி விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிலளித்து உரையாற்றவுள்ளார்.

இன்றைய விவாதத்தின் போது பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,”மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் ஒரு சதவிகிதத்தை கொரோனா 2 வது அலைக்காக செலவிட்டு வருகிறோம். எனவே, இப்போதைக்கு நிதி நிலையை கருத்தில் கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க முடியாது. நிதிநிலை சீரானவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாக்குறுதிப்படி பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.