சென்னை

தொடர்ந்து ஏழாம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் விலையைத் தினசரி மாற்றுகின்றன.   சில நாட்களாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

கொரோனா உச்சத்தில் இருந்த போது கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்தது.   ஆனால் அப்போது மத்திய அரசு வரிகளை உயர்த்தியதால் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.  தற்போது கொரோனா முடிந்த பிறகு கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துள்ளது.

கடந்த 7 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரிஹ்ட்து வருகிறது.  இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகளும் உயர்ந்துள்ளன.   சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.79 எனவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.97.59க்கும் விற்கப்படுகின்றன.