சென்னை

சிலைகள் உடைப்பு நிகழும் இவ்வேளையில் இசை அமைப்பாளர் டி எம் கிருஷ்ணா எழுத்தாளர் பெருமாள் முருகனின் கவிதைக்கு இசை அமைத்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.   அதன் பிறகு அம்மாநிலத்தில் அமைந்துள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் ரஷ்யத் தலைவர் லெனின் சிலை உடைத்து நொறுக்கப்பட்டது.    அந்த சிலை உடைப்பின் எதிரொலி தமிழ்நாட்டில் பெரியார் சிலை உடைப்பாகவும் உத்திரப் பிரதேசத்தில் அம்பேத்கார் சிலை உடைப்பாகவும் மாறியது.    இதனால் நாட்டில் பரபரப்பு உண்டாகியது.

டி எம் கிருஷ்ணா

இந்நிலையில் பிரபல தமிழ் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கவிதைக்கு டி எம் கிருஷ்ணா இசை அமைத்துள்ளார்.   கர்னாடக இசை வடிவில் இந்த கவிதைக்கு இசை கோர்த்துள்ள டி எம் கிருஷ்ணா இது குறித்து, “தங்களது சிந்தனைக்கு மாறாக உள்ள எந்த ஒரு சின்னத்தையும் அழிப்பது தற்போது அதிகமாகி வருகிறது.    அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாத கருத்தை சொல்லியவர்களின் சிலைகளை – லெனின், அம்பேத்கார், காந்தி, பெரியார் என – யாராக இருந்தாலும் அவர்களின் சிலைகள் உடைக்கப்படுகின்றன.

பெருமாள் முருகன்

இந்த சிலை உடைப்பு அவர்களின் சகிப்புத் தன்மை இன்மையை காட்டுகிறது.   ஒரு சிலை என்பது ஒரு கலைஞனின் படைப்பு.   அந்த சிலையை உடைப்பவர்கள் அந்தக் கலைஞனின் திறமையை அவமதிக்கிறார்கள்.   இதற்கு நாமும் ஒரு காரணம்.    சிலையை பார்க்கும் நாம் அதை செய்தவர் யார் என்பதை யோசிப்பதில்லை.

சிலை உடைப்பு பற்றிய கருத்தை பிரதிபலிக்கும் பெருமாள் முருகனின் கவிதைக்கு கல்யாணி ராகத்தில் ஆதி தாளத்தில் இசை அமைத்து வெளியிட்டுள்ளேன்.   சிலை உடைப்பாளர்களுக்கு இந்த பாடல் நிச்சயம் ஒரு விடை அளிக்கும் என நம்புகிறேன்” என கூறி உள்ளார்.

பெருமாள் முருகனின் கவிதை வரிகள் இதோ :

சிலைகள் எல்லாம் கலையின் வடிவம்
கலையே காலம் போற்றும் செல்வம்

அலை மோதும் கற்பனை கொண்டு
விலை யில்லா உழைப்பில் வடித்த

மலைமேல் கோவிலில் மறைந்து நின்று
மனதை மயக்கும் கடவுளர் எனினும்
சாலை நடுவில் சிறந்து நின்று
சரித்திரம் பேசும் பெரியார் எனினும்