‘பெரியார் விருது பெற்றது வளர்மதிக்கே ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும்’: நல்லக்கண்ணு

Must read

சென்னை,

மிழக அரசு சார்பாக இந்த ஆண்டு பெரியார் விருது முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொடுக்கப்பட்டது. இது பல்வேறு தரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பெரியார் விருது பெற்றது வளர்மதிக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கும் என்று மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணு நக்கலாக தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாய உணர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஆண்டுக்கான விருது பட்டியலில், பெரியார் விருதுக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்துகடந்த 16ம் தேதி மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் விருது  குறித்து கருத்து தெரிவித்துள்ள  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான  நல்லக்கண்ணு, பெரியார் விருது பெற்றது வளர்மதிக்கே ஆச்சர்யமாக தான் இருந்திருக்கும் என தெரிவித்தார்.

More articles

Latest article