சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் ஒரு மாத பரோலில் கடந்த மாதம் வெளியே வந்ததார்.

இந்நிலையில், பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என்று முதல்வருக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

ராஜீவ் வழக்கில் ஆயுள் கைதியாக 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருபவர் பேரறிவாளன். இவர்  அற்புதம்மாள், குயில்தாசன் தம்பதிகளின் மகன்.

இவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து முறையிட்டு வந்தார்.

அப்போது,  உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்ப்பதற்கு ஒரு மாதகாலம் பரோலில் விடுதலை செய்யவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். அவரது கோரிக்கை நீண்ட காலத்துக்கு பின்னர்  ஏற்கப்பட்டு பேரறிவாளனை பல்வேறு நிபந்தனை களுடன்  ஒரு மாத கால பரோலில் தமிழக அரசு விடுவித்தது.

அதைத்தொடர்ந்து கடந்த 24-8-2017 அன்று அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. அவரது பரோல் வரும் 24தேதியுடன் முடிவடைய இருப்பதால், மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.