சென்னை : 

மிழக அரசு ஊழியர்கள் பணியின்போது அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து தமிழக பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே போராட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்களின் ஊதியத்தை பிடிக்க உத்தரவு போட்டிருந்த நிலையில், தற்போது  அரசு ஊழியர்கள், அலுவலகத்தில் பணியின்போது தங்களுக்கான அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவை  பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலர் ஸ்வர்ணா ஐஏஎஸ் பிறப்பித்துளாளர்.

அதில், அரசு ஊழியர்கள் அணிய வேண்டிய அடையாள அட்டையில்,   பணியாளர்/ஊழியர் பெயர், அவர் வகிக்கும் பதவி ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் என ஒன்றன் கீழ் ஒன்றாக இடம்பெற வேண்டும்.இதற்கேற்றார் போல அடையாள அட்டையில் மாற்றம் செய்து வழங்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பணியின்போது அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.