சென்னை: எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது, உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது குறித்து, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது குண்டுவெடிப்பில் பலத்த காயமுடன் உயிர் பிழைத்த பெண்காவலர் அனுசுயா வேதனையுடன் தெரிவித்து உள்ளார். ஒரு வழக்கில் எத்தனை விதமான தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒரு நீதிமன்றம், ஒரு வழக்கில் எத்தனை விதமான தீர்ப்புகளை வழங்க முடியும்?
ஆயுள் தண்டனை என்றால், ஆயுள் முடியும் வரை சிறையில் தான் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், மனிதாபிமான அடிப்படையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உள்பட 16 பேரை கொன்று தீர்த்த பேரறிவாளனை, கோர்ட் விடுவிக்கும் என்றால், கோர்ட் நடைமுறையை எப்படி எடுத்து கொள்வது என புரியவில்லை.
இன்றைக்கு பேரறிவாளனை வெளியே விட்டவர்கள், அடுத்து அவரோடு சேர்ந்து கொலைகள் செய்த மேலும் ஆறு பேரையும் விடுவிப்பார்களா? அப்படியென்றால், பேரறிவாளன் உள்பட ஏழு பேரும் செய்தது தியாகமா?
கோர்ட் பார்வையின்படியே எடுத்து கொள்வோம்.
கோவையில் குண்டு வெடிப்பின்போது கைதான மற்றவர்களையும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் இதே தீர்ப்பும், நீதியும் பொருந்துமா?
எங்களை பொறுத்தவரை, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு, ஒரு நாளும் மன்னிப்பு கிடையாது.
கோர்ட் விடுதலை செய்யலாம். ஆனால், ராஜீவ்காந்தி கொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களும், ராஜீவ்காந்தி ஆன்மாவும் ஒருபோதும் அவர்களை மன்னிக்காது,
பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் ஒவ்வொரு நிமிடமும் விடும் சாபத்திலிருந்து, கொலையாளிகள் தப்ப முடியாது.
இவ்வாறு கூறினார்.
பேரறிவாளன் சுதந்திரப் போராட்ட தியாகியா? நாங்கள் தமிழர்கள் இல்லையா! கொந்தளிக்கும் பாதிக்கப்பட்டோர்…