திருப்பதி

திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்

திருப்பதியில் இருந்து திருமலை வெங்கடாசலபதி கோவிலுக்கு செல்லும் மலைப் பாதையில் இரவில் இருசக்கர வாகனத்தில் சில பக்தர்கள் சென்றுக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த பாதையில் ஒரு சிறுத்தை வந்து அவர்களை தாக்கி உள்ளது. இதனால் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் ஒரு சிறுமியும் உள்ளார். சிறுத்தை நடமாட்டத்தால் மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது. இதை ஒட்டி இன்று தேவஸ்தானக் குழு கூடி உள்ளது. அந்த கூட்டத்தில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ள்து.

பக்தர்களின் பாதுகாப்புக்காக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில் இரு சக்கர வாகனங்களை அனுமதிக்க மறுப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. அத்துடன் நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கும் இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை தடை விதிப்பது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.