புதுடெல்லி: கடந்தவாரம் வருமான வரித்துறையைச் சேர்ந்த 12 அதிகாரிகளை கட்டாய ராஜினாமா செய்ய வைத்து வீட்டுக்கு அனுப்பிய நிலையில், தற்போது சுங்கத்துறையை சேர்ந்த 15 உயர் அதிகாரிகளையும் அதேபோன்று கட்டாய ராஜினாமா மூலம் வீட்டுக்கு அனுப்பியுள்ளது மோடி அரசு.

இந்த அதிகாரிகள் அனைவரும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறான புகார்களுக்கு ஆளானவர்கள் என்று அரசு தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது நடவடிக்கைக்கு ஆளான 15 அதிகாரிகளில், முதன்மை கமிஷனர், கூடுதல் கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் போன்ற உயர் நிலையிலுள்ள அதிகாரிகளும் அடக்கம்.

ஏற்கனவே ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட 12 அதிகாரிகளுள் 5 பேர் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளனர்.

கடந்தமுறை ஆட்சியிலிருந்தபோது, திட்டமிடாமல் திடீரென்று ஜிஎஸ்டி வரி விதிப்பை அறிமுகப்படுத்தி, பல தொழில்களை முடக்கிய சாதனையை செய்தது மோடி அரசு. அப்படி, அந்த வரிவிதிப்பு குறித்து விமர்சனம் செய்த சில அதிகாரிகளும் தற்போது குறிவைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.