உங்கள் எம் எல் ஏக்களை மரியாதையுடன் அழைத்துக்கொள்ளுங்கள்: கமலஹாசன் காட்டம்!

Must read

சென்னை:

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மானத்தில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்றார். ரகசிய வாக்கெடுப்பு இல்லாமல் வெற்றிபெற்றது குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் கமலஹாசன் தொடக்கத்திலிருந்தே சசிகலாவுக்கு எதிரான நிலைபாட்டைக் காட்டிவருகிறார்.

இந்நிலையில் சசிகலா தரப்பு முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றது குறித்து தனது ட்விட்டர் தளத்தில், தமிழக மக்களே மரியாதைக்குரிய உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை அவர்களுக்குரிய மரியாதை அளித்து திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article