சென்னை: பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள அம்மா உணவங்களில் இரவு உணவாக வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டது மக்களிடையே கடுமையான அதிருப்தியை உருவாக்கிய நிலையில்,  அம்மா உணவகங்களில் மீண்டும் சப்பாத்தி விற்பனை நடைபெறுடம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

ஏழை மக்களின் பசிப்பிணியை போக்கும் அட்சய பாத்திரமாக அம்மா உணவகம் இருந்து வருகிறது. இதை நம்பி தினசரி லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில்  3வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. இரவு சப்பாத்தி வழங்கப்பட்டு வருகிறது. இதை வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்கள் விரும்பி உண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விரைவில் பல அம்மா இரவு உணவு நிறுத்தப்பட்டது. சப்பாத்தி போடுவதும் ரத்து செய்யப்பட்டது. இது ஏழை மக்கள் கட்டிட பணியாளர்களுக்கு பெரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக பத்திரிகை டாட் காம் உள்பட சில ஊடகடங்கள் செய்திகள் வெளியிட்டன.

இந்த நிலையில், மீண்டும் இரவு உணவாக சப்பாத்தி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில்,  சென்னையில் 403 ‘அம்மா’ உணவகங்கள் செயல்படுகின்றன. தனியார் நிறுவனத்தின் இயந்திர கோளாறால், கடந்த 10 நாட்களாக இரவு உணவில் சாப்பாத்திக்கு பதில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது. தற்போது, இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு, இரவு நேரங்களில் சாப்பாத்தி வழங்கப்படுகிறது.

அதேபோல், 403 உணவகங்களில், எந்த ஒரு உதவிக்குழு உறுப்பினரும் பணியில் இருந்து நீக்கப்படவில்லை. விற்பனைக்கு ஏற்ப சமச்சீராக உறுப்பினர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் மூடப்படுகிறது அம்மா உணவகம்? இரவு உணவு கட்….