ராஜமுந்திரி

டிகர் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைக்க உள்ளது.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் நேற்று சந்தித்து பேசினார்.  பிறகு அவர்  செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பவன் கல்யாண்

”தெலுங்கு தேசம் கட்சியுடன் என்னது கட்சி இணைந்து ஆந்திராவில் அடுத்த தேர்தல்களில் போட்டியிடும். எங்கள் நோக்கம்  ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் பார்த்துக் கொள்வதே ஆகும். எனவே அடுத்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும், ஜனசேனாவும்  இணைந்து போட்டியிடும்.

நான்ன் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறேன், தற்போது ஆந்திராவில் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலையையும், அராஜகத்தையும் புரிந்து கொண்டு பாஜக எங்களுடன் இணைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

உண்மையில் சந்திரபாபு நாயுடு அரசியல் தலைவர் ஆனால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு பொருளாதார குற்றவாளி, தற்போது, சிறையில் சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு குறித்த கவலைகளைப் பிரதமர் மோடியிடம் நான்  தெரிவிப்பேன்”

என்று கூறினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர் பவன் கல்யாணுடன் தெலுங்கு தேசம் தேசிய பொதுச்செயலாளர் நரலோகேஷ், பாலகிருஷ்ணா எம்.எல்.ஏ. ஆகியோரும் உடனிருந்தனர்.