மேஷம்

பணவரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் ஃப்ரெண்ட்ஸ் உதவி செய்வாங்க. பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான சான்ஸ்  ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். தந்தைவழி ரிலேடிவ்ஸ்ஸால் செலவுகள் ஏற்படும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் கடின முயற்சியின் பேரில் சாதகமாக முடியும். ஆபீஸ்ல சுமுகமான சூழ்நிலையே காணப்படும். உங்களுடைய சமயோசிதமான ஆலோசனை பெரிதும் பாராட்டப்படும். புதிய வேலைக்கு அப்ளை செய்திருந்தவங்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தில் பார்ட்னர்ஸ் கூட இருந்துக்கிட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

ரிஷபம்

குடும்பத்தில் கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரை யொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. ஹெல்த்தில் கவனம் தேவைப்படும் வாரம். பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இல்லை. ரிலேடிவ்ஸ்  வருகை ஹாப்பி ஆக்கும் . பிள்ளைங்களோட தேவைங்களை நிறைவேற்றுவதில் சற்று அலைச்சல் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி ரிலேடிவ்ஸ்ஸால் அனுகூலம் உண்டாகும். ஆபீஸ்ல பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமா செயல்படுவீர்கள். ஒங்களோட கோரிக்கை நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பாங்க. குடும்பத்தை நிர்வகிக்கும் லேடீஸ் பொறுமையா இருக்கவேண்டிய வாரம். தாய்வழி ரிலேடிவ்ஸ் மூலம் பணவரவு மற்றும் பொருள்சேர்க்கைக்கு சான்ஸ் உண்டு.

மிதுனம்

பணவரவு திருப்தி தரும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிச்சுடுவீங்க. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். அவசியம் ஏற்பட்டால் பெரியவங்களோட அட்வைஸ் கேட்டுச் செய்வது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் போயே போச். டாடியோட ஹெல்த்தில் கவனம் தேவை. ஆபீசுக்குப் போகும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். ஆபிசர்ஸ் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவாங்க. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள் வது அவசியம். மற்றபடி வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகள் ஆதரவாக இருப்பாங்க. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. சகோதரர்கள் மூலம் பணவரவுக்கு சான்ஸ் உள்ளது.

கடகம்

பணவரவு திருப்தி தரும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிப்பீங்க. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பீங்க அது நல்ல பலன் தரும். அவசியம் ஏற்பட்டால் பெரியவங்களோட ஆலோசனையைக் கேட்டுச் செய்வது நல்லது. மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தந்தையின் ஹெல்த்தில் கவனம் தேவை. ஆபீசுக்குப் போகும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துக்குங்கப்பா. ஆபிசர்ஸ் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவாங்க. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள் வது அவசியம். மற்றபடி வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகள் ஆதரவாக இருப்பாங்க. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. சகோதரர்கள் மூலம் பணவரவுக்கு சான்ஸ் உள்ளது.

சிம்மம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். பணவரவு மகிழ்ச்சி தரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் சான்ஸ் உண்டு. ரிலேடிவ்ஸ்  வருகையால் சுப நிகழ்ச்சிங்க ஏற்பாடாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகளை நடத்தும் சான்ஸ் ஏற்படும். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் சுபச் செலவாக இருப்பது மகிழ்ச்சி தரும். ஆபீஸ்ல மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துக்குவாங்க. ஒரு சிலருக்கு அவங்க எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் உற்சாகம் தரும். வியாபாரத்துல கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் லேசாய் காரணமாக அசதியும் சோர்வும் உண்டானாலும் மனசுல உள்ள உற்சாகம் அதை மறக்கடிக்கும்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 3 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள்

கன்னி

பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். ஆனால், கடன்கள் விஷயத்தில் சற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். டிராவல் செய்தீங்கன்னா… கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்குங்க. மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாய்க் குடும்பத்துல சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. ஆபீஸ்ல திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்பு பவர்கள் அதற்கான முயற்சில ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்க சான்ஸ் இருக்கு. பணியிடத்துல சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்துல விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் ஒங்களோட முயற் சிகளுக்கு உதவி செய்வாங்க. சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும்

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 5 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள்

துலாம்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப் பதால் சமாளித்துவிடுவீர்கள். ரிலேடிவ்ஸ்  வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக் கும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். பிள்ளைகள் மூலம் எதிர்பாராத பண வரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் சான்ஸ்ஏற்படும். இளைய சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி உறவு சுமுகமாகும். ஆபீஸ்ல சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். ஒங்களோட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது. வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். லேடீஸ்க்கு திருப்திகரமான வாரம். வாரப் பிற்பகுதியில் பிள்ளைகள் மூலம் எதிர்பாராத பணவரவு உங்களை ஹாப்பி ஆக்கும்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 8 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள்

விருச்சிகம்

வருமானத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்களின் முயற்சியால் தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் கூடி வரும். தாயாரின் ஹெல்த்தில் கவனம் செலுத்தவும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் அலைச்சலும் சோர்வும் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் சான்ஸ்ஏற்படும். புதிய முயற்சிகளை வாரப் பிற்பகுதியில் தொடங்கவும். ஆபீஸ்ல உங்களின் ஆலோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அதன் காரணமாக சில சலுகைகள் கிடைப்பதற்கு சான்ஸ்உண்டு. சக ஊழியர்களிடையே ஒங்களோட கௌரவம் உயரும். வியாபாரத்தை விரிவுபடுத்தவும், சரக்குகளைக் கொள்முதல் செய்யவும் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நல்லபடி முடியும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சான்ஸ் ஏற்படும். பெண் அல்லது பிள்ளை தொடர்பான முக்கிய முடிவு எடுக்கும்போது வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கேட்பது அவசியம். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியானாலும் முடிந்துவிடும். ஆபீஸ்ல ஒங்களோட பணிகளை உற்சாகமாய்ச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். ஆபிசர்ஸ் சில நேரங்களில் கண்டிப்பாகப் பேசினாலும் அனுசரணையாகவும் இருப்பாங்க. புதிதாக வியாபாரம் தொடங்க விரும்பறவங்க  இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்துல கூடுதல் லாபம் கெடைக்கும். ஹாப்பியான வாரம்.

மகரம்

குடும்பத்துல உற்சாகமும் சந்தோஷமும் நெறைஞ்சிருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி ரிலேடிவ்ஸ்ஸால் காரிய அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவாங்க. சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு சான்ஸ்உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமை அவசியம். ஆபீஸ்ல ஒங்களோட பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ஆபீஸ்ல அதிகமா உழைக்க வேண்டியிருக்கும். ஆண்களோ, பெண்களோ, ஆபீஸோ வீடோ, அக்கம் பக்கமோ.. பேச்சுல மட்டும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருந்துடுங்கப்பா.

கும்பம்

பணவரவு ஹாப்பி ஆக்கும் . வீண் செலவுகளும் ஏற்படுவதற்கில்லை. ஃப்ரெண்ட்ஸ் சந்திப்பு சந்தோஷமும் தருவதாக இருக்கும். உடன்பிறப்பு சம்பந்தமான ரிலேடிவ்ஸ்ஸால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஹெல்த்தில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதம்  ஏற்படக் கூடும், ஸோ, ஒருவரையொருவர் அனுசரிச்சுக்கிட்டுப் போறது நல்லது. குழந்தைங்க சம்பந்தமா ஆர்க்யூ செய்வீங்க. சண்டை போட்டு முகத்தைப் பார்க்காம இருந்த நெருங்கின சொந்தங்க அடிமேல அடி வைச்சு உங்களை அசைக்கப் பார்ப்பாங்க.  அரசாங்க சமாசாரங்க அனுகூலமா முடியும். புதிய வேலைக்கு முயற்சி செய்துக்கிட்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். மகன் அல்லது மகள் மேல இருந்த கோபம் தணிய ஆரம்பிக்கும். கூடப் பிறந்தவங்களுக்கு ஒங்க உதவி  தேவைப்படும். செய்ங்க.  மனைவி/ கணவர் வழி உறவின் ஆதிக்கம் அதிகமாகும்.

மீனம்

தேவையான அளவுக்குப் பணவரவு இருப்பதாலும், வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது என்பதாலும் ஹாப்பியான வாரம்.  சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட சான்ஸ் உள்ளதால் சற்று பொறுமையா எதையும் டீல் பண்ணுங்க.  பிள்ளைங்களோட உடல்நலனில் கவனம் செலுத்துங்க.  ஒங்களோட முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கெடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். ஆபீஸ்ல பணிச்சுமை அதிகரிக்கும். எனினும் பாராட்டும் கெடைக்கும். வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசியம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். ஒங்களோட தேவைங்களை கணவர் நிறைவேற்றிவிடுவது மகிழ்ச்சி தரும். ஃப்ரெண்ட்ஸ்கூட ஜாலியாப் பொழுது போகும். ஊர் சுற்றுவீங்க. என்ஜாய்.