மேஷம்
இந்த வாரம் நீங்க நினைச்சது நிறைவேறும். எதிரிங்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கும். வீட்டில் ரொம்ப உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மருத்துவ செலவுகள் வரலாம். பெண்களுக்குச் சில விஷயங்களில்  நெருக்கடியான நிலை உண்டாகுமுங்க. வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீங்க. உங்க முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீங்க. சமூகத்தில் உங்க அந்தஸ்து உயரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
ரிஷபம்
கலைத்துறையில் உள்ளவங்க உங்க திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீங்க. உங்க செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமா இருக்கும். புதிய வாகனம் வாங்குவீங்க. மாணவர்களுக்குப் பாடங்களை படிச்சே ஆகவேண்டிய கட்டாயம் உண்டாகுமுங்க.ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லதுங்க.இளைய சகோதரர்கள் மூலம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். எதிரிகள் மூலம் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அலுவலகம் செல்வதால் உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்குச் சலுகைங்களும் விரும்பிய இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்கும். பெண்கள் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க.
மிதுனம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்கவீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உறவினர் களின் உதவி கிடைக்கும். தாய்மாமன் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். தொட்ட தெல்லாம் துலங்கும். தந்தையாரின்  நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப் படுவீங்க. குடும்பத்தில் சின்னஞ்சிறு சண்டைகள் உருவாகிச் சரியாகும். நாவடக்கம் தேவைப்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீங்க. நண்பர்களால் எதிர்பார்த்த அளவுக்கு நன்மைகள் ஏற்படாது. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீங்க .
கடகம்
வேலையில் கூடுதல் கவனமாக இருங்க ப்ளீஸ். குடும்பத்தில் பிள்ளைங்களிடம் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு லாபம் கிடைக்கும். சுப செலவுகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபம் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யும் முன்பாக யோசனை செய்து கொள்ளுங்கள். பெண்களுக்கு வீட்டிலும் வெளியிலும் மதிப்பு மரியாதை கூடும். அலுவலகத்திற்கு செல்லும் பெண்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். அதிகார எல்லைகள் கூடுதலாவதால் உங்க கை ஓங்கும்.
சிம்மம்
விலகி நின்ற உறவினர்கள் உங்களை நாடி வருவாங்க. வராது என்று நீங்கள் கைவிட்டிருந்த பணம் கைக்கு வரும். மனதுக்குப் பிடித்த விருந்தினர் வருகை உண்டாகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீங்க. உத்தியோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீங்க. உற்சாகமான விஷயங்களை உற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வீங்க. உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மனதளவில் உற்சாகமாக இருப்பீர்கள். சுறுசுறுப்பு அதிகமாகும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். குழந்தைக்காக தவமிருக்கும் பலருக்கு புத்திர பாக்கியம் கைகூடி வரும். சிலர் புதிய வண்டி வாகனம் வாங்குவீங்கபயணங்களை இந்த வாரம் தவிர்த்து விடுங்கள். வண்டி வாகனத்தில் வெளியே போக வேண்டாம்.
கன்னி
கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லதுங்க. தொழில் வியாபாரத்தில்  மெத்தன போக்கு காணப்பட்டாலும் பணவரத்து நன்றாக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லதுங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். வேலை காரணமாக சிலருக்கு அலைச்சல் அதிகரிக்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லதுங்க. மறைமுக விமர்சனங்களும் ஏச்சுகளும் வந்தாலும் பொறுமையால் வெல்வீங்க. வாகனம் சிறிது தொந்தரவு தருவதால் சரிசெய்வீங்க. வீட்டில் செய்ய வேண்டிய வேலை களைப் பல நாள் தள்ளிப்போட்டு இந்த வாரம் முடிப்பீங்க. தாயாருக்கு உடல்  சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைச்சு லாபம் பெறுவீங்க.
துலாம்
உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகுமுங்க. உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாங்க. முன்பு பகைத்துக்கொண்ட அக்கம்பக்கத்தினருடன் நட்பு மீளும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் வாரம். குடும்பத்தினருக்காகச் செய்யும் தியாகத்துக்குப் பாராட்டு எதிர்பார்க்க  வேண்டாம்.
சந்திராஷ்டமம் : மே மாதம் 22 முதல் மே மாதம் 24 வரை
விருச்சிகம்
தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டாலும் முயற்சியில் வென்று அதிலிருந்த மீளுவீர்கள்.  தெளிவாகப் பேசி உங்களைப் புரிய வையுங்கள். பணப்புழக்கம் இன்கிரீஸ் ஆகும். அதே நேரத்தில் சுப செலவுகளும் வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். சிலருக்கு பாப்பா  பிறக்கும். பல வேலைகளையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டி வரும். மற்றவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றி கொள்ள பாருங்கள். சிரமமான விஷயங்களை நன்கு முயன்று முடிப்பீங்க. பெற்றோரின் ஆதரவு கிடைப்பதற்கு வேண்டிய முயற்சிகள் செய்வீங்க. நல்ல செலவுங்களுக்குப் பணம் வேண்டி மற்றவர்களின் உதவியை நாடுவீங்க.  வெளிநாட்டிலிருந்து மனதிற்கு இதமான செய்தி வரும்.
சந்திராஷ்டமம் : மே மாதம் 24 முதல் மே மாதம் 26 வரை
தனுசு
லேடீஸ் ரொம்பப் பொறுமையாக இருங்க. நிதானத்தை கடைபிடித்தால் பிரச்சினைகளில் இருந்து தப்பலாம். தன்னம்பிக்கை தைரியம் கூடும். உடலில் உஷ்ணம் தொடர்பான பாதிப்புங்க வரலாம் கவனமா இருங்க. உங்க செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலைச்சுமை கூடும். இத்தனை நாள் ஓய்விற்கு பிறகு அலுவலகம் போனவர்களுக்கு கால நேரம் பார்க்காமல் வேலை இருக்கத்தான் செய்யும். அலுவலகத்தில் பொறுமையை கடைபிடிங்க. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வங்கிக்கடனுதவி கிடைக்கும். அரசு சலுகைகள் தேடி வரும். அலுவலகத்தில் குரலை உசத்திக் கன்னாபின்னான்னு கத்தாதீங்க. ஜென்ட்டிலா இருங்க.
சந்திராஷ்டமம் : மே மாதம் 26 முதல் மே மாதம் 29 வரை
மகரம்
ஃபாமிலியில் இருந்துக்கிட்டிருந்த  பிரச்னைங்க சரியாகி ஒருத்தருக்கொருத்தர்  நெருக்கம் அதிகமாகும். உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். பிரிஞ்சிருந்தவர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு கனிந்துள்ளது. பிள்ளைங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக செலவு செய்யுங்க. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் கவனமாக இருங்க. வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் வரலாம். லாபத்தை நினைச்சுக் கவலைப்படாதீங்க.  போட்ட முதலுக்கு மோசமிருக்காது. பேச்சில் கவனமாக பேசுங்க கோபமாக பேச வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க. உறவினர்களால் சில சிக்கல்கள் வரலாம் சமாளிங்க.
கும்பம்
ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். பெண்களுக்குத்  தடைபட்ட காரியங்கள் நல்லபடியா நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம். அரசியல்வாதி களுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்ச்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள்.உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். நீண்ட நாட்கள் கழித்து அலுவலகத்திற்கு செல்வீர்கள் உற்சாகமாக பணி செய்வீங்க மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் பணம் கடனுதவி கிடைக்கும். குல தெய்வ கோவிலுக்கு போய் வருவது நன்மையை ஏற்படுத்தும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு வங்கிக்கடனுதவி கிடைக்கும். பெண்களுக்கு கணவர், குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில்  வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத்தன்மை தேவைப்படும். .வீட்டில் உற்சாகம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு கைகூடி வருகிறது. தம்பதியர் இடையே நெருக்கம் கூடும். தொண்டர்கள் உங்க பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீங்க. கலைத்துறையினருக்கு திறமைக் கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பணவரவில் முன்னேற்றம் உண்டாகுமுங்க. நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீங்க அமைதியாகச் செயலாற்றுவீங்க மாணவர்களுக்கு  கல்வியில் நாட்டம் உண்டாகுமுங்க.