வார ராசிபலன்: 22.1.2021  முதல்  28.1.2021 வரை!  வேதாகோபாலன்

Must read

மேஷம்

குடும்ப கருத்து வேறுபாடுகள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் மீளும். வீட்டில் உங்களுக்கான சுபநிகழ்ச்சி  சம்பந்தமான  பேச்சுக்கள்  நடக்கும். குழந்தைங்க வழியில் சந்தோஷமான செய்திகள் வரும். கணவன் மனைவியிடையே சுமூக நிலை காணப்படும். ஸ்டூடன்ட்ஸ் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விருந்து விசேஷங்களுக்கு செல்வீங்க. சஞ்சலம், குழப்பத்தால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாறுவீங்க. சிறிதளவு ஜீரணப் பிரச்னை யினால் உடல் நிலை பாதிப்படைந்து மீளும். முடியுமானால் பிரயாணங்களை அவாய்ட் செய்யப்பாருங்க. வாகன மாற்றம் இருக்கும். கொடுக்கல், வாங்கல் குறைந்த லாபம் தரும். அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். கடன் சுமை தீரும். அயல் நாட்டு உதவி கிடைக்கும். பெண்களின் பொறுமைக்குப் பரிசு உண்டு. கலைஞர்களின் எண்ணம் வெற்றி பெறும். தாமதப்படுத்தப்பட்டு வந்த வேலைகள் முடியும். சக பணியாளர்களின் தொல்லை தீரும். தேவையற்ற செலவை அவாய்ட் செய்ங்க.

ரிஷபம்

செலவுகள் குறைந்து நிறைவோடு இருப்பீங்க. தொலைத்தொடர்பு அனுகூலம் தரும். பிசினஸில் புதிய முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப்போட முடியுமானால் நல்லது. போட்டியாளர்களை சமாளிக்க நேரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. குழந்தைகளால் மனதிற்கு சந்தோஷம் உண்டு. தன வரவும், புதிய பொருள் சேர்க்கையும் சற்றுக் குறைந்தே இருக்கும். ஸ்டூடன்ட்ஸ் உயர்கல்வி பயிலவும், விரும்பிய படிப்புகளில் சேர எடுக்கும் முயற்சிகள் சிறு தடைகள் மற்றும் தாமதத்துக்குப் பின்தான் நிறைவேறும். கணவன் மனைவி ஒற்றுமை கூடும். உறவினர்கள். நண்பர்கள் பல்வேறு வழிகளில் உதவுவர். பெற்றோரின் உடல் நலன் சீராக இருக்கும். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை மறையும் நண்பர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளிநாட்டில் பணிபுரிவர்கள் முன்னேற்றமடைவாங்க.  பெண்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டாகும்.

மிதுனம்

குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி  பற்றிய முயற்சிகள் மெல்ல வடிவெடுத்து நல்லபடியாக முடியும். எதிர்கால முன்னேற்றம் பற்றிய  சிந்தனைகள் மனதில் உதயமாகும். இது பிற்கால நன்மைக்கு வழிவகுக்கும். புதிய தொழில் முயற்சிகள் லாபம் தருவதாக அமையும் பெண்களுக்கு மிகச் சிறந்த வாரமாக இது உள்ளது. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீங்க இட மாற்றம் சம்பந்தமாக முயற்சிகளில் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். இதுவரை அலவலக வேலையில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி மனதில் முழுமையான நிம்மதி கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் சமாளிப்பீங்க. பெண்கள் திறமை காரணமாக நல்லபெயர் பெறுவீங்க.  எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். இளைஞர்களுக்குப் புத்துணர்ச்சி பெருகும். 

கடகம்

பங்குதாரர்களுக்கிடையே முன்பு ஏற்பட்டிருந்த சிறு பிரச்னை இந்த வாரம் சரியாகும். மாணவர்களின் கல்வி திறன் மேம்படும். நண்பர்களுக்கு ஆலோசனை கள் வழங்குவீங்க. உறவினர்கள் வழியில் கூடுதல் செலவுகள் இருக்கும்.  உடல்நிலை பாதிப்பிலிருந்து மீளுவீங்க. வீடு மாற எடுக்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்க்கவும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். அரசு சம்பந்தபட்ட விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். குழந்தைங்க உடல் நலனில் அலட்சியம் வேண்டாம்.  தொழில், உத்யோகம், பிசினஸில் இருந்த தேக்க நிலை மாறும். தன வரவு திருப்தி யளிக்கும். சகோதர சகோதரிகளிடையே வாக்குவாதம் வேண்டாம். தொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுச் சரியாகும். பிரச்னைகளைத் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீங்க.  பெண்கள் பொறாமைக்காரர்களால் தொல்லைக்கு ஆளாவீங்க.

சிம்மம்

வேலை மாறுவது சம்பந்தமாக விஷயம் தெரிந்தவர்களின் ஆலோசனையை எடுத்துக்கொள்ளுங்கள். நகை வியாபாரம் முன்னேற்றம் தரும். புதிய முதலீடு களை நல்லா யோசிச்சு செய்யுங்கப்பா. மேலதிகாரிகள் மற்றும் முதலாளியிடம் விட்டுகொடுத்து போக வேண்டும். உறவினர்கள், விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். உடன் பிறந்தோரால் பிரமாதமான ஆதாயம் உண்டு. பெண்கள், கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பீங்க. சொத்துக்கள் அல்லது வீடு வாசல் மூலம் வருமானம் வரும். மகன்/ மகள் விஷயத்தில் விடாமுயற்சியால் வெற்றிகள் கிடைக்கும். பிசினஸில் முன்னேற்றம் காணப்படும். புதிய திட்டங்கள் நன்மை தரும். குழந்தைங்க நலன் மேம்பாடு அடையும். தன வரவு திருப்தி தரும். பழையகடன்கள் அடைபடும். தம்பதியரிடையே அன்யோன்யம் மாறி மாறி இருக்கும்.. அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும்.  பெண்களுக்கு மகிழ்ச்சி கூடும். சக பணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் கூடும். ஹாப்பியான காரணத்துக்காக அலைச்சலுக்கு ஆளாக வாய்ப்புண்டு. கலைஞர்கள் முயற்சிகளில் வெற்றிபெறுவீங்க.

கன்னி

நண்பர்களால் உங்கள் குடும்பத்தினருடன் மனஸ்தாபம் ஏற்படாதபடி கவனமாக இருங்கள். இயந்திரங்கள், வாகனம் இயக்கும் போது அவசரமோ பதற்றமோ வேண்டாம். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடுவீங்க. எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். பள்ளி கல்லூரி நண்பர்களால் சிறு சந்தோஷம் ஏற்படும். காதல் சம்பந்தமான மகிழ்ச்சியான நிகழ்வுகள் மனதிற்கு இதமளிக்கும். அலுவலகத்திலோ வியாபாரத்திலோ கருத்து வேறுபாடுகளின் போது  மௌனம் காப்பது நல்லது. திடீர் ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தன வரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடு கள் செய்வீங்க. கணவன், மனைவி ஒற்றுமையில் அந்நியர்களின் மத்யஸ்தம் வேண்டாம். நிம்மதி கிடைக்கும்‘. சுப நிகழ்ச்சிகள் சற்றுத் தள்ளிப்போகக் கூடும். விசா தொடர்பான நல்ல செய்தி வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெண்களின் பயம் நீங்கும். பணியில் பொறுப்பின்மைகாரணமாக சிரமங்கள் நேரலாம்.

துலாம்

பெற்றோரின் உடல் நிலை மேம்படும். ஸ்டூடன்ட்ஸ் போட்டி தேர்வுகளில் நல்ல மார்க்ஸ் வாங்குவாங்க. உடலில் ஏற்படும் சிறுஉபாதைகளுக்கும் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். வாகன செலவுகள் ஏற்படும். நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீங்க. குலதெய்வ வழிபாடு நன்மை தரும். பிரயாணங்களால் செலவுகள் உண்டு. நிலம் சம்பந்தபட்ட இனங்களில் புதிய முதலீடுகள் செய்ய ஏற்ற வாரம்.  பங்குச் சந்தையில் மிக அளவோடு ரிஸ்க் எடுங்கள். அதிகாரம் உள்ள பதவியில் அமர்வீங்க. பெண்களுக்குக் கணவரின் பாராட்டுக் கிடைக்கும். மாணவர்களின் கவலைகள் தீரும். திறமைகள் வெளிப்படும்.  பயம் தீர்ந்து நன்மை பெறும் வாரம். குடும்பத்துடன் உற்சாகமாகப்  பொழுது போகும். பணியாளர்கள் முன்னேற்றம் அடைவாங்க. வெளிநாட்டு வாய்ப்பு தள்ளிப்போகக்கூடும். பழைய நண்பர்களைச் சந்திப்பீங்க.

சந்திராஷ்டமம் : ஜனவரி 22 முதல் ஜனவரி 25 வரை

விருச்சிகம்

தனவரவு உண்டாகும். கணவரின்/ மனைவியின் முயற்சியால் குடும்ப நிலை உயரும். வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். பெண்கள் கோல்ட், சில்வர் பொருட்கள் வாங்குவீங்க. வியாபாரிகளுக்கு தன வரவு திருப்தி தரும். உடன் வேலைபார்ப்பவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டி யிருக்கும். குழந்தைங்க வழியில் கூடுதல் செலவுகள் இருந்தாலும் அது ஹாப்பியான காரணத்துக்குத்தாங்க இருக்கும். பெற்றோரின் உடல் நிலை திருப்தி தரும். ஸ்டூடன்ட்ஸ் படிப்பில் கவன சிதறல் ஏற்படாதபடி கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும் வாரம். தந்தையின் ஆரோக்யம் தேறும். முயற்சிகள் வெற்றி அடையும். பெண்களுக்கு இனிமையான தகவல் வரும். கலைத்துறையில் புதிய வாய்ப்புக்கிடைக்கும். மனசில் ஒருவித டோன்ட் கேர் எண்ணம் வருமுங்க. தட் இஸ் பெட்டர். நிம்மதி அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 25 முதல் ஜனவரி 27 வரை

தனுசு

ஜீரணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கக்கூடும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி தள்ளி போகலாம். பிரயாணத்தின்போது பொருட்களின் பாதுகாப்பில் கவனம் தேவை. தொழில் முறையில் செய்வோருக்குக் கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும். சிறிய அளவிலான புதிய முதலீடுகள் செய்யலாம். பெரிய அளவில் லாபம் இல்லாவிட்டாலும், செலவுகள் குறைந்து நிறைவோடு இருப்பீங்க. இதுவரை சக பணியாளர்களால் அலுவலகத்தில் உங்களுக்கு  இருந்துவந்த பிரச்னைகள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும்.  பலகாலமாகத் தாயாருக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பிசினஸில் எதிரிகளை சமாளிக்க புதிய திட்டமிடல்களை செயல்படுத்துவீங்க. தடைகள் நீங்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெறுவீங்க. தொழில் செய்பவர்களுக்கு நம்பிக்கை கூடும். பெண்களுக்கு நல்ல சூழ்நிலை ஏற்படும். கலைத்துறையில் மகிழ்ச்சி நிலவும். 

சந்திராஷ்டமம் : ஜனவரி 27 முதல் ஜனவரி 30 வரை

மகரம்

பல்வேறு நன்மைகள் தரக்கூடிய வாரம் இது. நீங்கள் கலைத்துறையில் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியடையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த தன வரவு கிடைக்கும். குழந்தைங்க  பொருளாதாரத்தில் நல்ல நிலையை அடைவாங்க குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் நல்ல தகவல்களை பெறுவீங்க. புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளிடமிருந்து ஆறுதலூட்டும் செய்திகள் வந்துகொண்டிருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கவலைகள் குறையும். கணவருக்கு/ மனைவிக்கு நல்ல தகவல் வரும். தேவையற்ற  கற்பனைக் கவலைகள் சூழும். திருமணம் பற்றி நல்ல தகவல் வரும். பணி தொடர்பான முயற்சிகளை துவக்கலாம்.  புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிரிகள் உங்கள் வாழ்விலிருந்து காணாமல் போவாங்க.

கும்பம்

பெண்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததைவிட தனவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வுகள் நடக்கும். வீடு கட்ட, கட்டிய வீட்டைச் சீர்செய்யத் திட்டங்கள் போடுவீங்க. குடும்பத்தில் அமைதி நிலவும். புத்திர பாக்யம் வேண்டியவர்களின் கனவு நனவாகும். கணவன் மனைவியிடையே  ஒற்றுமை மாறி மாறி இருக்கும். கணவர்/ மனைவி வழி உறவினருக்கு உதவுவீங்க. குழந்தைங்க வழியில் சுப செலவுகள் உண்டு. அவங்களால சந்தோஷம் வரும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உஷ்ணம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்படலாம். பிசினஸ்  சிறக்கும். உறவினர்கள் வழியில் செலவுகள் கூடும். பணியில் அதிக கவனம் தேவைப்படும். வழக்குகளுக்குத் தீர்வு தாமதமாகும். வியாபாரிகள் தடைக்குப்பின் நன்மை அடைவாங்க. மற்றவர்களின் பொறாமை காரணமாக உண்டாகியிருந்த சிக்கல் தீரும். பெண்களின் பிரச்னை தீர முயற்சிகள் எடுப்பீங்க

மீனம்

பெரியோர் மற்றும பெற்றோரின் சூப்பரான ஆலோசனை கிடைக்கும். அதை நீங்க சரியானபடி எடுத்துக்கிட்டீங்கன்னா.. வாழ்க்கை ஜொலிக்கப்போகுது பார்த்துக்குங்க. உங்களுக்கு ஃபேமிலி மற்றும் நண்பர்கள் மூலம் பல நன்மைகள் கொடுக்கக்கூடிய சிறந்த வாரமாகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் உறவினர்களுக்கு  உதவிகளும் நன்மைகளும் செய்து பாராட்டுப் பெறுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை பெற்றுக்கொள்வீங்க வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். ஸ்டூடன்ட்ஸ்க்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் நெருக்கம் நன்றாக இருக்கும் ஆரோக்கியம் பற்றி கவனம் தேவை. இடம் விட்டு இடம் மாற வாய்ப்பு உண்டு. தொழில் முயற்சிகள் வெற்றியடையும்.

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article