சென்னை

கிறித்துவ மதபோதகர் பால் தினகரன் அலுவலகம் மற்றும் இல்லம் ஆகிய இடங்களில் தொடர்ந்து  3 ஆம் நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.

பிரபல கிறித்துவ மத போதகரான பால் தினகரன் ஏசு அழைக்கிறார் என்னும் அமைப்பை நடத்தி வருகிறார்.  இதைத் தவிர தாம்பரத்தில் சீஷா அறக்கட்டளை, கோவையில் காருண்யா பல்கலைக்கழகம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். இவருடைய அறக்கட்டளை மற்றும் அமைப்புக்களில் அளிக்கப்பட்டுள்ள வரி விலக்கில் விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இதையொட்டி வருமானவரித்துறையினர் பால் தினகரனின் சென்னை இல்லம், ஏசு அழைக்கிறார் அமைப்பு மற்றும் காருண்யா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்குச் சொந்தமான சென்னை மற்றும் கோவையில் உள்ள இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.  இன்றும் மூன்றாம் நாளாக இந்த சோதனை தொடர்ந்து வருகிறது.  இந்த சோதனையில் வெளிநாட்டு நன்கொடைகளை மறைத்துள்ளதாகவும் பல்கலைக்கழக வருமானத்தைக் குறைத்துக் காட்டியதையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதா தெரிய வந்துள்ளது

.

இந்த சோதனையில் ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ், வங்கி தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.   அத்துடன் பால் தினகரனின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் விவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   இதைத் தவிர பல்கலைக்கழக நிர்வாகிகள், கணக்காளர்கள்,தணிக்கையாளர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடந்து வருகிறது,.

தற்போது பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கனடாவில் உள்ளனர்.  அவர்களைச் சென்னைக்கு வரவழைத்து விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.