நாஷ்விலே

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் நாஷ்விலே நகரில் ஒரு பாதிரியார் துப்பாக்கி ஏந்தி வந்தவரைத் திருத்தி உள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் ஒன்று டென்னிஸி ஆகும்.   இதன் தலைநகர் நாஷ்விலே ஆகும்.   இது அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு  மாகாணம் ஆகும்.  இதன் மொத்த பரப்பளவு 1,09 லட்சம் சதுர கிமீ ஆகும்.  மக்கள் தொகை அடிப்படையில் இம்மாகாணம் 16 ஆம் இடத்தில் உள்ளது.

இந்த மாகாணத்தில் கிறித்துவ மதத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர்.  அதே வேளையில் இங்குப் பயங்கரவாத செயல்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.   இம்மாகாணத்தின் தலைநகர் நாஷ்விலேவில் இன்று நடைபெற இருந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் ஒரு பாதிரியாரின் சமயோசித செயலால் நிறுத்தப்பட்டுள்ளது.

நாஷ்விலே நகரில் உள்ள ஒரு பெந்தகோஸ்தே தேவாலயத்தில் பாதிரியார் எஸகீல் நிடிகுமனா என்பவர் மத போதனை செய்து கொண்டு இருந்த நேரத்தில் துப்பாக்கி ஏந்தியபடி வந்த ஒருவர் போதனை மேடைக்கு வந்துள்ளார்.  அத்துடன் பாதிரியாரை நோக்கி துப்பாக்கியால் குறி வைத்துள்ளார்.  ஆனால் பாதிரியார் அச்சமடையவில்லை.

மாறாக அவர் துப்பாக்கி ஏந்திய மனிதருக்காகப் பிரார்த்தனை செய்து அவரை திருந்த வைத்துள்ளார்.    இதனால் அங்கு நிகழ இருந்த துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டு அந்த மனிதரிடம் இருந்த ஆயுதம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.  இந்த காட்சி வீடியோ பதிவாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ