கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், திரையுலகினர் சமூக வலைத்தளத்தில் பிஸியாகியுள்ளனர் .

மேலும் சமூக வலைத்தளங்களில் அதிகம் மீம்களும் பரவி வருகின்றன. அந்த வகையில் நானும் ரௌடி தான் படத்தில் நயன்தாரா, பார்த்திபன், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த ஒரு காட்சியை மையப்படுத்தி ஒரு மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

அது இணையத்தில் வைரலான நிலையில் அதை நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் எடுத்து நடிகர் பார்த்திபனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதை பார்த்திபன் ட்விட்டரில் விக்னேஷ் சிவன் எனக்கு அனுப்பியது என்று பகிர்ந்துள்ளார்.