கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன..

இது தொடர்பாக திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய வீடுகள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றை அரசின் பயன்பாட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள்.

நடிகர் ஷாரூக் கான், தான் நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் பல்வேறு வகைகளில் நிவாரண உதவி அளிக்க முன்வந்துள்ளார்.

மும்பை, கொல்கத்தா, புது டெல்லி ஆகிய நகரங்களில் முதல் கட்டமாக உதவ முடிவெடுத்திருக்கும் ஷாரூக் கான், தான் அளிக்கவுள்ள உதவிகள் குறித்து விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

மேலும் ஷாரூக் கானும் தனது 4 மாடிக் கட்டிடத்தை மும்பை மாநகராட்சிக்குக் கொடுத்துள்ளார்.

ஷாரூக் கான் மற்றும் அவரது மனைவியின் தாராள உதவிக்கு மும்பை மாநகராட்சி, “ஒற்றுமையே வலிமை. ஷாரூக் கான், கவுரி கான் இருவருக்கும் நன்றி. அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இருந்த 4 மாடி அலுவலகக் கட்டிடத்தை எங்கள் பயன்பாட்டுக்கு, தனிமைப்படுத்தப்பட்டவர்களைத் தங்க வைக்கக் கொடுத்துள்ளார்கள். இதில் தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள், பெண்கள், வயதானவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களும் உள்ளன. மிகவும் சிந்தனைமிக்க, சமயத்திற்கேற்ற செயல்” என்று ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளது.