பாட்னா

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் லாலுபிரசாத் யாதவின் சகோதரி மரமடைந்ததை அடுத்து அவருக்கு பரோல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமன லாலு பிரசாத்துக்கு கால்நடை தீவன ஊழல் வழக்கில் 3½ ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சி.பி.ஐ. தனி நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் லாலு பிரசாத்தின் ஒரே மூத்த சகோதரியான கங்கோத்ரி தேவி (வயது 73) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று திடீரென மறைந்தார். அடைந்தார். அவருடைய உடல் இறுதிச் சடங்கிற்காக சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

 

இது குறித்து லாலுபிரசாத்தின் மகன் தேஜஸ்வி கூறுகையில், ‘‘அத்தை கங்கோத்ரி தேவி  இறந்த தகவலை ராஞ்சி சிறையில் உள்ள எனது தந்தையிடம் தெரிவித்துள்ளோம். பரோலில் வெளியே கொண்டு வருவதற்கு சிறை அதிகாரிகள் மூலம் முயற்சி செய்து வருகிறோம். நேற்று ஞாயிற்றுக்கிழமை,  வார விடுமுறை தினம் என்பதால் எனது தந்தையால் பரோலுக்கு உடனடியாக விண்ணப்பிக்க இயலவில்லை. இன்று பரோல் பெற முயற்சிப்போம்’’ என்றார்.

லாலுபிரசாத்தின் மனைவி ராப்ரிதேவி கூறும்போது, ‘‘வழக்கில் இருந்து தனது தம்பி (லாலு) விடுதலை ஆகவேண்டும் என்பதற்காக கங்கோத்ரி தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார். ஆனால் தண்டனை அறிவிக்கப்பட்டது. அந்த அதிர்ச்சியில் அவர் இறந்துவிட்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.