டில்லி

நாளை காலை 11 மணிவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியது முதல் அவையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி வருகின்றன.  இதில் குறிப்பாக மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன.

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. அப்போதும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  நாளை மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.