டில்லி

நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை நாடாளுமன்ற இரு அவைகளிலும்  மழைக் காலக் கூட்டத்தொடர்   தொடங்கியது.   கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து கோஷம் எழுப்பினர்.  மேலும் அவர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்தும் கோஷம் எழுப்பினர்.

இதையொட்டி முதலில்  மதியம் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.  மீண்டும் இரு அவைகளும் கூடியதும் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நேரிட்ட கொடுமையைக் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

எனவே இன்று நாள் முழுவதும் இரு அவைகளின் நடவடிக்கைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.  அதாவது நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளும்  நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.