திருவனந்தபுரம்: 
கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், இந்த அறிவிப்பால்  பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 10,12 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்றும், எஞ்சிய வகுப்புகள் அனைத்து வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,  கேரளாவில் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், இந்த அறிவிப்பால்  பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கொல்லத்தின் சின்னக்கடையைச் சேர்ந்த ஸ்மிதா நாயர் என்பவர் தெரிவிக்கையில், எனது மகள் அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிகளைத் திறப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  என் மகள் பள்ளிக்குச் செல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவளுடைய வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூக இடைவெளியை க்டைபிடிக்கப்பார்களா என்பதில் நான் கவலைப்படுகிறேன்.  எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது எவ்வளவு பாதுகாப்பானது என்றாலும், மூன்றாவது அலை வருகிறதா என்று சரியாகத் தெரியவில்லை. அதனால், எனது மகளைப் பள்ளிக்கு அனுப்புவதா? அல்லது ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்வதா? என்று யோசித்து வருகிறேன் என்று கூறினார்.
பல பள்ளி நிர்வாகங்கள் மாநில அரசின் முடிவை வரவேற்றுள்ளன.
கேரளாவின் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்களின் தலைவர் இந்திரா ராஜன் பேசுகையில், “மாநில அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம், குழந்தைகளை வரவேற்கப் பள்ளிகளைச் சுத்தம் செய்யவும் பராமரிக்கவும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. இது ஒரு நல்ல முடிவு என்று நான் நினைக்கிறேன் என்றார்.
அரசாங்கத்தின் முடிவுக்கு மருத்துவக் குழுவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளிகளை மீண்டும் திறப்பது நல்ல முடிவு என்றும், ஐஎம்ஏ இந்த முடிவை வரவேற்கிறது என்றும் கூறினார்.
சஜித். சி.வாரியர், செயின்ட் ஜோசப்ஸ் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர், பேசுகையில், “பள்ளிகளைத் திறப்பது ஒரு நல்ல முடிவு என்றும், ஆனால் அதற்கு முன்பு பள்ளிகள் திறக்கும் நேரத்தில் ஆசிரியர்கள் தடுப்பூசி போட வேண்டும் என்றும், பள்ளிகள் மீண்டும் திறப்பதன் மூலம் குழந்தைகள் பயனடைவார்கள் என்று கூறினார்.
இதற்கிடையில், கேரள கல்வி அமைச்சர் என் சிவன்குட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளிகள் ஷிஃப்டுகளில் நடத்தப்படும் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், பள்ளிகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகளை மாநிலக் கல்வித் துறை தொடங்கியுள்ளது. வகுப்புகள் ஷிப்டுகளில் நடத்தப்படும். பள்ளிப் பேருந்துகள் இல்லாத பள்ளிகளுக்கு அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்யும் என்று அவர் கூறினார்.