புதுடெல்லி: 
மிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் புது வகை டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
செரோடைப் – 2 வகை டெங்குகாய்ச்சல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிகளவில் பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
வேகமாகப் பரவுவதுடன் அதிகளவு உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் இவ்வகை டெங்கு வைரஸ் பரவலைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.