பதவி விலகும் முன்பு சோனியாவுக்குக் கடிதம் எழுதிய அமரீந்தர் சிங் 

Must read

சண்டிகர்:
ஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தான், பதவி விலகும் முன்பு சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ள இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
இதையடுத்து அதன் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. 80 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் பஞ்சாபின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வழங்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நேற்று அம்பிகா சோனி சந்தித்துப் பேசினார். அப்போது ராகுல் காந்தியிடம் பேசிய அம்பிகா சோனி,
பஞ்சாப் முதல்வராகப் பதவி ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதுடன்,  சீக்கியர் ஒருவரை நியமிக்கப் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், தான் பதவி விலகும் முன்பு சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ள இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், தனது ராஜினாமாவை ஆளுநரிடம் முறையாகச் சமர்ப்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடித்ததில், பஞ்சாபின் நிலை மற்றும் அதன் கட்சியின் முக்கிய கவலைகள் பற்றிய தனக்கு  முழு புரிதல் இல்லை” என்று தெளிவாகக் குறிப்பிட்டு இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான லலிதாஷ் பதி திரிபாதி, தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article