சென்னை:

மிழக சட்டமன்றம் டிஜிட்டல் சட்டமன்றமாக மாறி வருகிறது. அதற்கான பயிற்சி வகுப்புகளை நேற்று சபாநாயகர் தனபால் தொடங்கி வைத்தார்.

நவீன காலத்திற்கு ஏற்க, அனைத்து நிறுவனங்களையும், காகிதம் இல்லாமல், மின்னணு முறைக்கு மாறி வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தின் அனைத்து ஆவனங்கள் மற்றும் நிகழ்வுகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சி நடைபெற்று வந்தது.

நாடு முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகளின் நடவடிக்கைகளை காகிதம் இல்லாத வகையில் மாற்றம் செய்ய தேசிய ‘இ-விதான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழக  சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தை யும் டிஜிட்டல் முறையில் மாற்றுவது குறித்த 2 நாள் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பை சபாநாயகர் தனபால் தொடங்கி வைத்தார்.

அதன்படி, இனி வரும் காலங்களில், சட்டமன்ற ஆவணங்கள்  அனைத்தும்  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காகிதங்களில் வழங்கப்படாமல், மின்னஞ்சல் மற்றும் செயலி வழியாக அனுப்பப்படும்.  மேலும், பேரவை மண்டபத்தில் பெரிய டிஜிட்டல் திரைகள், எம்.எல்.ஏ.,க்கள் இருக்கைக்கு முன்பாக, தொடு திரை வசதியுடன் கூடிய திரைகள், கையடக்கக் கணினி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டமன்ற அவைக்கு உரிய ஆவணங்களை மின்ஆவணங்கள் (Digital) வடிவில் வழங்குவது குறித்து திமுக தொழில்நுட்ப குழு தலைவர் பி.டி.தியாகராஜன் மற்றும், எழிலரசன் ஆகியோரும் உதவி வருவதாகவும், அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடர், Paperless Governanceஐ (காகிதமில்லா)  நோக்கி அடியெடுத்து வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்றம் டிஜிட்டல் மயமாக மாறி வருவதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.