ம்மு

திடீரென எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைப்பகுதியில் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயற்சிக்கும் பயங்கரவாதிகளைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று  ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவின் அரினா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

நேற்று இரவு 8 மணி அளவில் எல்லையில் உள்ள இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு மற்றும் சிறிய ரக பீரங்கி குண்டுகளை வீசி  தாக்குதல் நடத்தியது. இந்தியா இந்த தாக்குதலுக்கு \பதிலடி தாக்குதல் நடத்தியது.

இதையொட்டி எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் படுகாயமடைந்தார். அந்த வீரர் ஜம்மு வில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.