கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பெரிய இலக்கை விரட்டிவரும் பாகிஸ்தான் அணி, விரைவிலேயே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த அணி 34 ஓவர்களில், 186 ரன்களுக்கு, 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்துவிட்டது.

தற்போது அந்த அணி, 97 பந்துகளில் 156 ரன்களை எடுத்தாக வேண்டிய இக்கட்டில் உள்ளது. கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.

துவக்க வீரர் இமாம் உல் ஹக், 5 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பக்கர் ஸமான் 89 ரன்களை அடித்து களத்தில் உள்ளார். கேப்டன் பாபர் ஆஸம் 31 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். முகமது ரிஸ்வான் டக்அவுட்.

ஷதாப் கான் 13 ரன்களுக்கும், ஆஸிப் அலி 19 ரன்களுக்கும் அவுட்டாகியுள்ளனர். டேனிஸ் அஸிஸ் 9 ரன்கள் மட்டுமே அடித்தார்.

தற்போது பக்கர் ஸமானுடன் களம் கண்டிருப்பவர் பஹீம் அஷ்ரப். தற்போதைய சூழலில், பாகிஸ்தான் அணி வெல்வது சாதாரண விஷயமல்ல என்ற நிலையே நிலவுகிறது.

தென்னாப்பிரிக்க அணியின் சார்பில், நார்ட்ஜேவுக்கு 3 விக்கெட்டுக‍ள் கிடைத்தன.