பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தவில்லை! இந்திய ராணுவம் மறுப்பு!

Must read

ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்  தாக்குதல் எதுவும் மேற்கொள்ளவில்லை என்று இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
army
காஷ்மீர் எல்லை பகுதியான உரியில் அமைந்துள்ள  ராணுவ  முகாமில் அதிகாலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இதன்  காரணமாக இந்திய ராணுவத்தினர் பயங்கர கோபத்துடன் உள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ஆவேசமுடன் காணப்படுகின்றனர். ஆனால், இப்போது எந்த தாக்குதலும் வேண்டாம் என டைரக்டர் ஜெனரல் இந்திய ராணுவத்தை அமைதி படுத்தி உள்ளார்.
இதற்கிடையில், இந்திய ராணுவத்தின் இரண்டு ஹெலிகாப்டரில் சென்ற வீரர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது அதிரடி தாக்குதலை மேற்கொண்டதாகவும், இதன் காரணமாக 20க்கும் மேறப்ட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்ப்ட்டவர்கள் காயமடைந்ததாகவும் இணைய இதழில் பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால், இந்த செய்தி உண்மை இல்லை என்றும், அப்படி எந்த ஒரு தாக்குதலும் நடத்தவில்லை என இந்திய ராணுவ தரப்பில் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து http:\www.patrikai.com இணைய இதழுக்கு ஓய்வுபெற்ற ராணுவ லெப்டினன்ட் கர்ணல் கணேசன்  அளித்த சிறப்பு பேட்டி….

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய இந்திய ராணுவம்?

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article