இந்தியாவின் 'பராக்-8' அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி!

Must read

parak-1டில்லி:
ந்தியா- இஸ்ரேல் கூட்டு தயாரிப்பில் உருவான ‘பராக்-8’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.
அணு ஆயுதங்களை சுமந்தபடி தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் திறன் படைத்த இந்தியாவின் ‘பராக் – 8’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்தியா, இஸ்ரேல் கூட்டு முயற்சியில்  ‘பராக் 8’ ஏவுகணை  ஒடிசாவின் சாண்டிப்பூரில் உள்ள  சோதனை மையத்தில் இருந்து  சோதித்துப் பார்க்கப் பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி  (டிஆர்டிஓ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெற்றிகரமான சோதனையை தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட சோதனைகள்  நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து டிஆர்டிஓ அதிகாரி கூறும்போது,
‘‘ஏவு கணையுடன் அதில் பொருத்தப் பட்ட சர்விலனஸ் மற்றும் அடுத்த நாடுகளின் அச்சுறுத்தலை உஷார்படுத்தும் ரேடார் (எம்எஃப் ஸ்டார்) முறைகளும் சோதித்துப் பார்க்கப்பட்டது. அதன் செயல்பாடும் திருப்திகரமாக உள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் விண்ணில் உள்ள எந்தவொரு இலக்குகளையும் ஏவுகணையால் துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும்’’ என்றார்.
நம்மை தாக்க வான்வழியாக வரும் எந்த வொரு அச்சுறுத்தலையும் திறம்பட எதிர்கொள்ளும் வகையில்  இந்த ஏவுகணை நவின நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்,   அணு ஆயுதங்களைச் சுமந்தபடி 70 கி.மீ முதல் 90 கி.மீ சுற்றளவில் உள்ள இலக்குகளை எளிதாக தாக்கும் வல்லமை படைத்தது என்றும் குறிப்பிட்டார்.
குறிப்பாக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் ஆகியவற்றையும் இடைமறித்து அழிக்கும் திறன் பெற்றது பராக்-8. இந்த ஏவுகணை 2.7 டன் எடையில், 4.5 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூன், 30 மற்றும் ஜூலை 1-ம் தேதியில் தரையில் இருந்து விண்ணில் பாயும் நடுத்தர ரக ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article