டில்லி:

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்தியஅரசு ரத்து, அதை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிந்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அதைத்தொடர்ந்து, கடந்த 7ந்தேதி பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்புக் குழு கூட்டம் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

”டில்லியிலிருந்து  பாகிஸ்தான் தூதரை திரும்ப அழைக்கவும், தங்கள் நாட்டிலுள்ள இந்தியத் தூதரை திருப்பி அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும், இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்  செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை பாகிஸ்தான், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அறிவுறுத்தி உள்ளது.

மேலும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்  முழுமையான உள்நாட்டு விவகாரம் என்றும் இந்த விவகாரத்தில் யார் தலையிட முயன்றாலும் அவர்களின் முயற்சி வெற்றி பெறாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.