ஸ்லாமாபாத்

ச்சநீதிமன்றம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் என்னும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பாகிஸ்தான் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மத்திய பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்குக் காஷ்மீர் அரசியல் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த ரத்தை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

இதற்குக் காஷ்மீர் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்  மேலும் பாகிஸ்தான் நாட்டிலும் இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பாகிஸ்தான்  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜலில் அப்பாஸ் ஜிலானி, தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு இட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர்,

“சர்வதேச சட்டம், இந்தியாவின் ஒருதலைபட்சமான சட்டவிரோதமான 2019, ஆகஸ்டு 5 நடவடிக்கைகளை அங்கீகரிக்காது. இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எந்த சட்டப்பூர்வ மதிப்பும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, காஷ்மீரிகள் யாராலும் பறிக்க முடியாத சுய நிர்ணய உரிமையைப் பெற்றுள்ளனர்”

என்று கூறி உள்ளார்.

இதைப் போல் முன்னாள் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்,

“இது ஒருதலை பட்சமான தீர்ப்பு , காஷ்மீரிகளின் உரிமைக்காகக் குரல் எழுப்புவோம்”

என்று கூறி உள்ளார்.