நாகப்பட்டினம்

இலங்கை கடற்படையினர் 25 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூரி கைது செய்வது தடர்ந்து வருகிறது.  மத்திய மாநில அரசுகள் இது குறித்து பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  ஆயினும் கைது நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிரது.

இந்நிலையில் நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த 25 மீனவர்கள் 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை \ பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்துள்ளது.  கைது செய்யப்பட்டவர்கள் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆவார்கள்.