ஸ்லாமாபாத்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தான் அரசு ஜெய்ஷ் ஈ முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முஃப்தி அப்துல் ரவூஃபை கைது செய்துள்ளது.

சர்வதேச அமைப்பான ஃபைனான்சியல் ஆக்‌ஷன் டாஸ்ஃப் ஃபோர்ஸ் என்னும் இயக்கம் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி புரியும் நாடுகளுக்கு எதிராக போராடி வருகிறது. இந்த இயக்கம் பாகிஸ்தான் மீது தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்பதாகவும் அத்துடன் தீவிரவாதிகளை நாட்டினுள் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தது. ஏற்கனவே பாகிஸ்தான் மீது இந்த அமைப்பிடம் ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அதை ஒட்டி இந்த அமைப்பு பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தை உடனடியாக ஒடுக்க வேண்டும் என கெடு விதித்திருந்தது. இந்த அமைப்பின் எச்சரிக்கையை அடிப்படையாக கொண்டு உலக வங்கி மற்றும் உள்ள சர்வதேச நிதி நிறுவனங்கள் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்துள்ளது.  தீவிரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அந்நாடு கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடுகளுக்கு சரவதேச நிதி நிறுவனங்கள் மற்றும் உலக வங்கி எவ்வித நிதி உதவியோ கடனோ அளிக்காது. தற்போது பாகிஸ்தானை ஆளும் இம்ரான் கான் அரசு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளதால் அந்த அரசுக்கு தீவிரவாத இயக்க்கங்களின் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டிய ஒரு சூழல் உள்ளது. எனவே ஜெய்ஷ் ஈ முகமது இயக்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 44 பேரை அரசு கைது செய்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முஃப்தி அப்துல் ரவூஃப் உம் ஒருவர் ஆவார்.   இது குறித்து பாக் அரசு, “தீவிரவாத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அரசு தீர்மானித்தது. அதை ஒட்டி முஃப்தி அப்துல் ரவூஃப், ஹமத் அசார் உள்ளிட்ட 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என அறிக்கை விடுத்துள்ளது.