ஜெனீவா:

மனித உரிமை ஆர்வர்லர்களுக்கு எதிரான தாக்குதல் நடக்கும் வெட்கக்கேடான 38 நாடுகளில் பட்டியலில் இந்தியாவையும் ஐக்கிய நாடுகள் சபை இணைத்துள்ளது.


ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் ஜெனரல் அன்டோனியோ கட்டரஸ் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மனித உரிமை ஆர்வலர்களை கொலை செய்வதும், துன்புறுத்துவதும், தன்னிச்சையாக கைது செய்வதும் தொடர்கிறது.
மனித உரிமைகளுக்காக போராடும் தைரியமானவர்களை, மனித உரிமை மீறல்களை ஐநா சபைக்கு தருவோர் துன்புறுத்தப்படுகின்றனர்.
ஐநா சபையுடன் நட்போடு இருந்து கொண்டே மனித உரிமை ஆர்வலர்களை துன்புறுத்துவது வெட்கக்கேடான செயல்.

மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக வன்முறையை ஏவும் 38 நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 29 நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டவை. 19 நாடுகள் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருப்பவை.

பஹ்ரைன், கேமரூன், சீனா, கொலம்பியா, கியூபா, காங்கோ ஜனநாயக குடியரசு, ஜிபவுட்டி, எகிப்து, காட்டேமலா, குயானா, ஹோண்டுராஸ், ஹங்கேரி, இந்தியா,இஸ்ரேல், கிர்கிஸ்தான்,மாலத்தீவு, மாலி,மொராக்கோ, மியான்மர், பிலிப்பைன்ஸ், ரஷ்யா,ஆர்வான்டா, சவுதி அரேபியா, தெற்கு சூடான், தாய்லாந்து, ட்ரினிதாத் மற்றும் டொபேகோ, துருக்கி, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிஜுயேலா ஆகிய நாடுகள் வெட்கக்கேடான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மனித உரிமை ஆர்வலர்களை தீவிரவாதத்தோடு இணைத்து குற்றஞ்சாட்டுகின்றனர். வெளிநாடுகளுடன் சேர்ந்து நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், நாட்டின் கவுரவத்தை குலைப்பதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஐநா சபையோடு அவர்கள் தொடர்பில் இருப்பதாலேயே இத்தகைய நடவடிக்கையை இந்த நாடுகள் எடுக்கின்றன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.