சீரொளி (laser) இயற்பியல் கண்டுபிடிப்புகளுக்காக 2000 -ம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்ற ரஷ்ய அறிவியலாளர் ஆல்ஃபெரோவ் தன்னுடைய 88வயதில்  இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு ரஷ்ய அதிபர் விளாமின் புதின் உள்பட  அறிவியலாளர்கள்  இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

குறை கடத்தித் துறையில் பணியாற்றிய எர்பர்ட்டு குரோமர் அவர்களும், தொகுசுற்று அல்லது ஒருங்கிணைந்த மின்சுற்றுகளைக் கண்டுபிடித்த சேஅக்கு கில்பி உடன்  இணைந்து ஆல்ஃபெரோவ்க்கும் கடந்த 2000ம் ஆண்டு  நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1969 இல் காலியம் ஆர்சினைடு மற்றும் அலுமினம் காலியம் ஆர்சினைடு ஆகியவற்றிக்கொண்டு உருவாக்கிய குறைகடத்தி இருமுனையக் கருவியில் முதன்முதலாக சீரொளி என்னும் சீரொற்றிய ஒளிமிகைப்பியைச் செய்துகாட்டினார். இதனை அறை வெப்பநிலையிலேயே இயங்கும்படியும் செய்துகாட்டினார்.

இதுவே பின்னர் ஒளிவட்டை, (சிடி பிளேயர்)  இறுவட்டு முதலான பயன்கருவிகளுக்கும் ஒளி வழியதான தொடர்பாடலுக்கும் வழிவகுத்தது. பெரும் பயன் விளையுமாறு தன் ஆய்வுகளை நாட்டிவிட்டு இயற்கை எய்தியுள்ளார்.

புகழாளி  ஆல்ஃபெரோவ் அவருடைய இழப்பிற்கு ஆழந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க அவர்தம் புகழ்!

செய்தி: Professor C.R Selvakumar as professor at Waterloo university, Canada