இந்திய மணமகனுடன் பாக் மணமகளை இணைத்து வைத்த சுஷ்மா

Must read

க்னோ

ந்திய மணமகணை மணக்க பாகிஸ்தான் மணமகளுக்கு சுஷ்மா விசா அனுமதி அளித்துள்ளார்.

கான்

லக்னோவை சேர்ந்த நகி அலி கான் ஆக்ராவில் பொறியாளராக பணி புரிந்து வருகிறார்.   பழைய லக்னோ பகுதியை சேர்ந்த இவருக்கு சபனத் ஃபாத்திமா என்னும் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.    ஃபாத்திமாவின் பெற்றோரில் கானின் பெற்றோரும் ஏற்கனவே நண்பர்களாக இருந்தவர்கள்.    பிரிவினைக்குப் பிறகு ஃபாத்திமாவின் வீட்டார் பாகிஸ்தான் சென்று விட்டனர்.

ஃபாத்திமா

ஃபாத்திமா பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரை சேர்ந்தவர் என்பதால் விசா கிடைக்கவில்லை.    அதனால் இருவரின் திருமணமும் தள்ளிக் கொண்டே வந்தது.   இதனால் கான் சென்ற வருடம் இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு மனு ஒன்றை அனுப்பினார்.   இந்த மனு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பார்வைக்கு வந்தது.

சுஷ்மா மணமகளுக்கு விசா கிடைக்க உத்தர்விட்டார்.   சென்ற வெள்ளிக்கிழமை அவர்களுக்கு திருமணம் நடந்தது.    தற்போது ஃபாத்திமாவுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஜனாதிபதி அலுவலகத்துக்கு சுஷ்மா சிபாரிசு அளித்ததை முன்னிட்டு அவருக்கு குடியுரிமை வழங்கப்பட மனு அளிக்கப்பட்டுள்ளது.   அமைச்சருக்கு மணமக்களும் அவர்கள் வீட்டாரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article