ஆன்லைனில் ‘பைரவா’: நடிகர் விஜய் அதிர்ச்சி!

Must read

பைரவா படம் நேற்றே ஆன்லைனில் வெளியாகி உலகம் முழுவதும் பதிவிறக்கம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tamilrockers என்ற இணைய தளத்தில், பைரவா படம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த தகவல் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நடிகர் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ஆனால், தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் நேற்று பகலிலேயே இந்த படம் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஏராளமானவர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதிகாரப்பூர்வமாக பைரவா படம் வெளிவருவதற்கு முன்பே  இணைய தளத்தில் வெளியாகி இருப்பதால் படத்தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

ஏற்கனவே தாணு தயாரிப்பில் ரஜினி நடித்த கபாலி படமும் இதுபோல் வெளியானது. இதுகுறித்து தாணு உயர்நீதி மன்றத்தில் பல வழக்குகள் தொடர்ந்து, இதுபோல் படங்களை வெளியிடும்  பல வலைதளங்களை தடை செய்ய முயன்றும், ரஜினியின் கபாலி படம் ரிலிசாவதற்கு முன்பே வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article