ஜல்லிக்கட்டு குறித்து “முரட்டுக்காளை” ரஜினி அமைதி:  இதுதான் காரணமா?

Must read

 

தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமா நடிகர்கள் சொல்வதுதான் வேதவாக்கு. திரையில் பார்த்த நாயகர்களை ஆட்சிக் கட்டிடில் அமரவைத்து அழகு பார்க்கும் பேருள்ளம் கொண்டவர்கள் தமிழர்கள்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு மிக அதிக அளவு ரசிகர்களைக் கொண்டிருக்கும் திரை நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவரது வாய்ஸூக்கு பெரு மதிப்பு கொடுக்கும் ரசிகர்கள் இன்றளவும் உண்டு. திரையில் இவர் ஸ்டைலாக சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பதை பார்த்து பிரமித்து இளைஞர்கள் பலர் புகைப்பழக்கத்துக்கு ஆளானது வரலாறு. இதை உலக சுகாதார நிறுவனமே சொல்லியிருக்கிறது.

மேலும், பாபா, இமயமலை. திருவண்ணாமலை என்று பலவற்றை பிரபலமாக்கியவர் ரஜினி.

இவர் நடித்த முரட்டுக்காளை படத்தில் வரும், ஜல்லிக்கட்டு காட்சியை இன்று மனத்திரையில் ஓடவிட்டு ரசிப்பவர் பலர் உண்டு.

இப்போது, தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டு குறித்த ஆதங்கம், கொந்தளிப்பாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் ரஜினி ஏன் இன்னும் இதற்கு வாய்ஸ் கொடுக்கவில்லை என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இருக்கிறது.

இத்தனைக்கும், கமல், விஜய் சேதுபதி, சத்யராஜ், இயக்குநர் பாரதி ராஜா, இயக்குநர் அமீர், இயக்குநர் கரு.பழனியப்பன், நடிகர் ஜி.வி பிரகாஷ் என்றஉ திரை நட்டத்திரங்கள் பலரும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பி இருக்கிறார்கள்.

ஆனால், “நோட்டு செல்லாது” என்ற மோடியின் அறிவிப்பை ஆதரித்து வாய்ஸ் கொடுத்த ரஜினி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏன் வாய்ஸ் கொடுக்கவில்லை என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகிறார்கள்.

ஒருவேளை, தனது மகள் ஐஸ்வர்யா, ஜல்லிக்கட்டை எதிர்ப்பதால், ரஜினி மவுனம் காக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

 

More articles

Latest article