ங்கியில், கடனை வசூல் செய்யும் பணி, விஜய்க்கு.  பெற்றோர் இல்லாத இவர்,  நண்பர் சதிஷூடன் வலம் வருகிறார்.  பிறகு கீர்த்தி சுரேஷை காண்கிறார். காதலிக்கிறார். பிறகு… வெள்ளித்திரையில் காண்க.

ஓப்பனிங் சீனிலே,  கலக்கலாக சைக்கிளில் வந்து அறிமுகமாகிறார் விஜய். அப்போதிலிருந்தது க்ளைமாக்ஸ் வரை, தனது வழக்கமான துறு துறு நடிப்பில் பின்னி எடுக்கிறார் விஜய்.  அதுவும் இன்டர்வெலுக்கு முன்பு வரும் சண்டை காட்சி  அவரது ரசிகர்களுக்கு மெகா விருந்து.

சற்று இடைவெளிககு பிறகு, விஜய்க்கு ஏற்ற கரம் மசாலா படம் இது.

முதல் பாதியில் காமெடியன் சதீஷ் சிரிக்க வைக்கிறார்.  தம்பி ராமைய்யா, மொட்டை ராஜேந்திரன் காமெடி சுமார் ரகம்.  கீர்த்தி சுரேஷ்  வழக்கமான கதாநாயகி. காதல் காட்சிகளில்  கூடுதலாக கவர்கிறார்.

இருபது நிமிடங்கள் வரும் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

இரண்டாம் பாதி  கொஞ்சம் இழுக்கிறது. திரைகதையில் இன்னும்  கவனம் செலுத்தி இருக்கலாம். தவிர அடுத்தடுத்து வரும் காட்சிகளை, முன் சீட் சிறுவனே சொல்லிவிடுகிறான்.

ஒற்றை ஆளாய் மொத்த படத்தையும் தூக்கி சுமக்கிறார் விஜய்.  கபாலியில் ரஜினிகாந்த்  சொல்வதைப்போல, ‘சிறப்பு’  என விஜய் அடிக்கடி கூறுவது கொஞ்சம்  எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

அனைத்து பாடல்களும் சிறப்பு. அதிலும் ‘வரலாம் வரலாம் வா’  தீம் பாடல் மிக அருமை.

மொத்தத்தில் விஜய் ரசிகர்கள் விரும்பும் படம்.