டில்லி,

த்ம விருதுகளுக்கு தகுதியானவர்களை மக்களே பரிந்துரைக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

விருதுகளுக்கு தகுதியுள்ளோரின் பெயர்களை மக்களே மத்திய அரசின் வலைதளத்தில் பரிந்துரைக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கலை, அறிவியில், விளையாட்டு, மருத்துவம், சமூகம் உள்ளிட்ட துறை களில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன.

பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகள் அவரவர்களின் தகுதிக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதுகள் வழங்கப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.  ஆளும் கட்சியை பொறுத்தே, அவர்களுக்கு சாதகமான மனிதர்களுக்கே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருவ தாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக் கும் வகையில், பத்ம விருதுக்கான தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்களே தெரிவு செய்யும் முறையை முதன்முதலாக மத்திய அரசு அறிமுகப்படுத்தி யுள்ளது.

ஆன்-லைன் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்கள் பத்ம விருதுக்காக பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பரிந்துரைக்க முன் வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே அவர்களது பரிந்துரை ஏற்கப்படும்.

www.padmaawards.gov.in என்ற வலைத்தளத்தில் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை பரிந்துரைகளை அனுப்பலாம் என அரசு தெரிவித்துள்ளது.

கலை,
இலக்கியம், கல்வி, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், வணிகம், தொழிற்துறை, பொது விவகாரங்கள், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் மிகச்சிறந்த வகையில் பணியாற்றிய வர்களை பொது மக்கள் பரிந்துரைக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

பத்ம விருதுகள் இதுவரை அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரி்ன் பரிந்துரையின் பேரிலேயே வழங்கப்பட்டு வந்ததாகவும் இனி மக்களின் பரிந்துரைகளும் பரிசீலிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.