மாணிக் சர்க்கார் – திரிபுரா முதல்வர்

அகர்தலா:

ம்யூனிஸ்டு முதல்வரான திரிபுரா முதல்வருக்கு சமூக வலைதளமான பேஸ்புக்கில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரை கொன்றால் ரூ.5 லட்சம் பரிசு என பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலிசார் தேடி வருகின்றனர்.

திரிபுரா மாநில முதல்வராக இருந்து வருபவர் மாணிக் சர்க்கார். இவருக்கு பேஸ்புக் புதிவு மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

திரிபுராவில் கடந்த  2013 முதல் கம்யூனிஸ்டு (எம்)  தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக 59 வயதான மாணிக் சர்க்கார் பதவி வகித்து வருகிறார்.

இவருக்கு பேஸ்புக் வலைதளம்மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.   முதல்வரை கொல்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என உலக ஆன்டி கம்யூனிஸ்ட் கவுன்சில் என்ற அமைப்பின் பெயரில் ரியா ராய் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து போலீசாரி விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

விசாரணையில், அது போலி முகவரியில்தொடங்கப்பட்ட பேஸ்புக் கணக்கு  என்பது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறி உள்ளனர்.